உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 28, 2026

Hot News

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானத்துடன் பறவை மோதல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கம்.!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (28) பிற்பகல் இங்கிலாந்தின் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று பிற்பகல் 12.55 மணியளவில் லண்டன் நோக்கிப் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதைத் தொடர்ந்து, விமானி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கியுள்ளார்.

இதனையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உபசரிப்புகளை வழங்கவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளை மாற்று விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பறவை மோதலுக்கு உள்ளான விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1268924

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time