உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 28, 2026

Hot News

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது.!!!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஃப்ளைடுபாய் விமானக் குழுவினரின் துணிச்சலான செயற்பாட்டைப் பாராட்டி, ‘Order of Zayed II’ விருதின் முதலாம் தரத்தை வழங்கிக் கௌரவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த FZ1073 விமானத்தில் ஏற்பட்ட தீவிரமான சம்பவத்தின்போது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விமானி உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

விமானத்தின் விமானி அறையில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இதன்போது விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் காயமடைந்த போதிலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டும் வகையில், விமானி மற்றும் விமானக் குழுவினருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி நேற்று (27) இந்த விருதை வழங்கிக் கௌரவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1268950

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time