உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 28, 2026

Hot News

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

துருக்கியில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தை.!!!

துருக்கியில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில், இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் துருக்கியின் பிரதியமைச்சர் பேராசிரியர் கலாநிதி லுத்ஃபி ஹாக் அல்ப்கான் ஆகியோருக்கு இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, துருக்கியின் தலைநகர் அங்காராவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை வழங்கக்கூடிய வகையில் வேலைவாய்ப்புத் துறையில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, துருக்கியில் இலங்கைத் தொழிலாளர்களுக்குத் துறைசார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வழங்கப்படும் பருவகால வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள ஆர்வத்தையும் இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் தொழிலாளர் ஒத்துழைப்புக்கான நடைமுறை வழிமுறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், துருக்கியில் இலங்கைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி உடன்படிக்கையும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1268877

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time