மட்டக்களப்பில் சோகச் சம்பவம்: நீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு, தன்னாமுனைப் பகுதியில் குளியலறையில் நீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அக்விவ் விகான் என அடையாளம் காணப்பட்ட ஒரு வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் குளியலறையில் துணிகளைத் துவைத்து, அவற்றை வாசற்படியில் காயவைத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக வேறு உடைகளை எடுப்பதற்கு தாய் வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில், குளியலறையில் துணி துவைத்த பின்னர் எஞ்சியிருந்த நீர் நிரம்பிய வாளிக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது.
பின்னர் தாய் வந்து பார்த்தபோது, குழந்தை வாளிக்குள் தலைகீழாக விழுந்து, மூச்சுவிட முடியாத நிலையில் காணப்பட்டதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.