உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

காணாமல் போன தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த; பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்.!!!

பொத்துவில் – மட்டக்களப்பு இடையிலான பேருந்து பயணத்தின் போது, ஒரு பெண் பயணியிடம் இருந்த தங்க நகை காணாமல் போனது. தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் கூட, பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தங்கள் நேர்மையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பேருந்து சேவை முடிந்த பின் வாகனத்தை சுத்தம் செய்யும் போது அவர்கள் அந்த தங்க நகையை கண்டெடுத்து, உடனடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு நகையை பாதுகாப்பாக கையளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் இவர்களை “நேர்மையின் முன்னுதாரணம்” என பாராட்டி வருகின்றனர்.

மக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பாக இவர்களின் பேருந்தில் பயணிக்கலாம் என்பதற்கான உயிரோடு இருக்கும் சான்றாக இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

“இவர்களின் மனிதநேய செயல் – அனைவருக்கும் ஒரு முன்மாதிரி”

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884646

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time