உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

சவால்கள் வந்தபோதெல்லாம் சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.!!!

-சீனிஸ்கான்-

எமது சமூகம் சொல்லொணாத் துயரங்களையும், நெருக்கடிகளையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எவ்வித அச்சமுமின்றி, சமரசங்களுக்கு இடமளிக்காது முதன்முதலில் குரல் கொடுத்துவருபவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.

அரசியல் இலாபங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் மௌனமாக இருந்த தலைமைகளுக்கு மத்தியில், சமூகத்தின் இருப்பும் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்ட போதெல்லாம் துணிச்சலுடன் முன்னின்று போராடுபவர்

எமது உயிரினும் மேலான புனித அல்குர்ஆன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த இருண்ட காலகட்டத்தில், ஒட்டுமொத்த சமூகமும் கவலையுடனும் அதிர்ச்சியுடனும் நின்றபோது, அல்குர்ஆனைத் தனது கைகளில் ஏந்தியபடி பாராளுமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்து, “எமது புனித நூலை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று உரக்க முழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர் ஹிஸ்புல்லாஹ்.

அந்தக் குரல் அன்றோடு முடிவடையவில்லை. அல்குர்ஆனின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்கவும், அதனைச் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அவர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.

எந்தச் சூழ்நிலையிலும் சமூகத்தின் உரிமைகளுக்காக அஞ்சாது குரல் கொடுக்கும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகவும் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்றும் திகழ்ந்து வருகிறார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 881471

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time