உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN இலக்கம் கட்டாயம்; இலவசமாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு.!!!

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தகுதியான குடிமக்களும் TIN (Taxpayer Identification Number) எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றிருப்பது தற்போதைய சட்டங்களின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது.

TIN இலக்கம் என்பது உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தினால் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண்ணாகும். நாட்டின் வரி நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், அரசாங்க வருவாய் சேகரிப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த இலக்கம் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கணக்குகள் திறத்தல், காணி மற்றும் சொத்து பரிவர்த்தனைகள், வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ மற்றும் நிதிசார் செயற்பாடுகளுக்கு TIN இலக்கம் அவசியமாகும். மேலும், வணிக நிறுவனங்களுக்கு இறக்குமதி, ஏற்றுமதி அனுமதிகள் மற்றும் அரசாங்க ஏலக் குத்தகை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் இந்த இலக்கம் தேவைப்படுகின்றது.

TIN இலக்கத்தை ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாக உள்நாட்டு வருவாய்த் திணைக்கள அலுவலகங்களில் விண்ணப்பித்தும் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்காக தேசிய அடையாள அட்டை (NIC), செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவை அவசியமாகும். சுயதொழில் செய்பவர்கள் வியாபாரப் பதிவுச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் e-Services இணையத்தளத்தில் “Taxpayer Registration” பகுதியின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் TIN இலக்கமும் அதற்கான சான்றிதழும் விண்ணப்பதாரரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கொழும்பு 02 இல் அமைந்துள்ள உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TIN இலக்கத்தைப் பெறுவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது என்பதுடன், இது முற்றிலும் இலவச சேவையாகும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 883647

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time