சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயது இளைஞர் கைது.!!!
கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் முப்பத்தொன்று (31) மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் கடற்படைக் கப்பல் ரங்கல நிறுவனம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சனிக்கிழமை (13) கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த 31 வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மின்னணு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

