கட்டணம் பெற்றும் விமான சேவை வழங்கவில்லை – கட்டார் விமான சேவைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு.!!!
கட்டணம் பெற்றுக்கொண்டு விமான சேவை வசதிகளை வழங்காத குற்றச்சாட்டின் கீழ் கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து இலண்டன் மற்றும் இலண்டனில் இருந்து கொழும்பு வரையிலான பயணங்களுக்காக, பயணிகள் சிலர் கொழும்பிலுள்ள தனாடா ட்ராவல் நிறுவனத்தின் ஊடாக கட்டார் விமான சேவையில் விமானப் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட போர் நிலைமையை காரணம் காட்டி குறிப்பிட்ட விமான வழித்தடங்களில் பயணங்களை இடைநிறுத்திய கட்டார் விமான சேவை நிறுவனம், பயணிகளின் முன்பதிவு கட்டணங்களை கடந்த இரண்டு மாதங்களாக இதுவரை திருப்பி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ரூ. 2 மில்லியன் பணம் இதுவரை திருப்பி வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும், பல தடவைகள் நினைவூட்டப்பட்டபோதிலும் நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் குறித்த ட்ராவல் நிறுவனம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.