உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இந்தோனேசியாவில் காட்டுத்தீ கோரத் தாண்டவம்: நால்வர் உயிரிழப்பு; பல நாடுகளுக்கும் காற்று மாசு பாதிப்பு.!!!

இந்தோனேசியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாகக் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், மவுண்ட் புரோமோ தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகத் தேசிய பூங்கா பகுதியில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர், பலத்த காற்றினால் திடீரெனப் பரவிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகைக்கு மத்தியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் நால்வர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், காட்டுத்தீயினால் உருவான புகை அண்டை நாடான மலேசியாவிற்கும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக அங்குள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் காற்று மாசின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வறட்சியும் பலத்த காற்றும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கம் அண்டை நாடுகளுக்கும் பரவியிருப்பது பிராந்தியத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1238409

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time