டித்வா புயல் இழப்பீட்டின்: இரண்டாம் கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்-
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் டித்வா புயலால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையின் இரண்டாம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) திங்கட்கிழமை புத்தளம் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி. விதானகே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
டித்வா புயலால் ஏற்பட்ட வீட்டு சேதங்களுக்கான இழப்பீட்டை அரசாங்கம் வழங்கி வருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே. பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர் பொறியியலாளர் எம்.எப். ரின்சாத் அஹமட், புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








