உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 13, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

வலுசக்தித் துறையினருடன் கலந்துரையாடிய – கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ.!!!

வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

விசேடமாக, புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில், வலுசக்தித் துறைக்கு அதிக தேவை இருப்பதாகவும், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குறித்த துறை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யும்போது அதிகளவு வரி செலுத்த வேண்டியிருப்பதால், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலுசக்தித் துறைத் தரப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும், வலுசக்தி அமைச்சர், அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் வலுசக்தி துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுடனும் விரைவில் மீண்டும் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலுசக்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துதல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் இதற்காக உற்பத்தியாளர்களின் பங்களிப்பைப் பெறுதல் குறித்தும் அதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வலுசக்தித் துறை முதலீட்டாளர்கள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1226763

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time