உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் வடிகால் சுத்திகரிப்பு பணிகள் தீவிரம்.!!!

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் வடிகால் சுத்திகரிப்பு பணிகள் திட்டமிட்ட அட்டவணைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கௌரவ முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், நகரின் நீரோட்டம் தடையின்றி நடைபெறவும், மழைக்கால பாதிப்புகளை குறைப்பதற்கும் மாநகர சபையினால் வடிகால் பராமரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பிஸ்கால் வீதியின் புதுப்பள்ளி பகுதி இன்று (21) சுத்திகரிக்கப்பட்டது.

பணியின் முன்னேற்றத்தினை கௌரவ துணை மேயர் யூ.எல். உவைஸ், மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.எச். ஹனீப், ஏ.எஸ்.ஏ. பஸித், எம்.என்.எம். ரியல், ஏ. ஃபஹீம் ஆகியோரும் மாநகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தருடன் (TO) இணைந்து நேரில் மேற்பார்வையிட்டனர்.

பொது சுகாதாரம், சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் நீரோட்ட பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிருப்பாகக் கொண்டு, நகரின் பிற பகுதிகளிலும் வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இயன்றளவு அனைத்து வடிகால்களும் கட்டுப்பாட்டுடனும் தரத்துடனும் சுத்திகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884660

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time