உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 28, 2026

Hot News

IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261019-WA0053
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இனி இடமில்லை: தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்.!!!

Share :

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் ரூ.6 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு.!!!

சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் அடங்கிய தொகுதியொன்று, வான்வழித் தபால் பொதிகள் (Air Mail) ஊடாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு ஒன்பது பொதிகளில் அடைக்கப்பட்டு இந்தப் போதைப்பொருட்கள் அனுப்பப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவரும் வருகை தராததைத் தொடர்ந்து, அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, அந்த முகவரிகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று (28) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் குறித்த ஒன்பது பொதிகளும் திறந்து சோதனையிடப்பட்டன.

இதன்போது, 60,265,000 ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1269218

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time