உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

வாக்காளர் இடாப்பு 2026: உரிமைக்கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கு ஜூன் 5 வரை அவகாசம்.!!!

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, வாக்காளர் இடாப்பின் ஆரம்ப வரைவு தற்போது மக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமது பெயர்கள் மற்றும் விபரங்கள் இடாப்பில் உள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் சென்று சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பினைப் பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர் இடாப்பில் பெயர்கள் விடுபட்டிருப்பின் அல்லது தகவல்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1074578

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time