உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

சர்வதேச-தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா.!!!

(பாறுக் ஷிஹான்)

சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா வெள்ளிக்கிழமை ( 26 ) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களை பாராட்டி பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிவ் 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884487

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time