உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

ஹஜ் 2026: இலங்கையிலிருந்து 325 யாத்திரிகர்களுடன் முதல் குழு சவூதி அரேபியாவிற்கு புறப்பட்டது.!!!

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு இலங்கையிலிருந்து 325 யாத்திரிகர்களைக் கொண்ட முதல் குழு நேற்று (01) இரவு சவூதி அரேபியாவிற்குப் புறப்பட்டது.

இந்த யாத்திரிகர்கள், இரவு 9.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SV-839 என்ற விசேட விமானம் மூலம் ஜித்தா நகரை நோக்கிப் பயணித்தனர்.

ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் யாத்திரிகர்களை வழியனுப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் விசேட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மத மற்றும் சமூகத் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு யாத்திரிகர்களுக்கு வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இம்வாண்டு ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையிலிருந்து பல கட்டங்களாக யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவிற்குப் பயணிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933759

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time