உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

ஓட்டுநர் மட்டுமல்ல, பின் இருக்கை பயணிகளும் கட்டாயம் – சீட் பெல்ட் விதி நாளை முதல் கடும் அமுல்.!!!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டை (Seat Belt) அணிவது நாளை (19) முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இருக்கைப் பட்டை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, நாளை முதல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருக்கைப் பட்டை அணியாமல் பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எதிராக நாளை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இருக்கைப் பட்டை அணியாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கைப் பட்டை அணியாததால் விபத்துகளின்போது உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கான அபாயம் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை, இந்தச் சட்டம் வெறுமனே அபராதம் விதிப்பதற்காக அல்லாமல் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே கடுமையாக அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, சில பழைய வாகனங்களில் உற்பத்தியாளர்களால் இருக்கைப் பட்டைகள் பொருத்தப்படாத காரணத்தால் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதாக தேசிய சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தகைய வாகனங்களில் இருக்கைப் பட்டைகளை பொருத்துவதற்காக பல தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இறுதி கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர் மற்றும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டை அணிவது கட்டாயமாகும் எனவும், இதற்கான சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் போதுமானது என்பதால், இனி சலுகைக் காலம் நீட்டிக்கப்படாது என தேசிய சாலைப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166799

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time