இலங்கை – ஐ.நா. மனிதாபிமான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சந்திப்பு.!!!
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரே பிரேன்சே ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான நீண்டகால மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் “Rebuilding Sri Lanka” மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டம் (Humanitarian Priorities Plan – HPP) தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளான அஸாம் பாக்கீர் மாக்கார், வகீஷ பெரேரா மற்றும் டி.சி.எம்.என்.ஆர்.டி. குரே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
