உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

106 பேருக்கு குடியிருப்பு காணி அனுமதிப் பத்திரங்கள் – வழங்கி வைப்பு.!!!

(எஸ் ஜே புஹாது)

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது

பொத்துவில் பிரதேச செயலாளர் எம் ஏ சி அஹமட் நஷீல் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று (15.10.2025) நடைபெற்ற
இந்நிகழ்வில் 106 பேருக்கான குடியிருப்பு காணி அனுமதி பத்திரம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஆதம் சலீம், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான மஹ்ரூப் மற்றும் புனிதன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் எஸ் எம் ஆரிப், நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் சதாத் மற்றும் சஹாப்தீன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884674

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time