உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

“பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் தான்” – முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கருத்து.!!!

அதிகாரத்தை பாவிக்கலாம், ஆனால் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கைப் பயணத்தையும், நீதித்துறை அனுபவத்தையும் நினைவுகூரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் தெரிவித்ததாவது; “பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் தான். நான் பதவி அதிகாரத்தை 100 விழுக்காடு பாவித்துள்ளேன். அதனால்தான் அரச தரப்பிலிருந்தோ அல்லது வேறு எந்த தரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், “சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள்; ஆனால் அதையே பூக்கடை அரசியலாக மாற்ற முடியும். அதற்கான காலம் சரியான பதிலைத் தரும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளஞ்செழியன் மேலும் கூறியதாவது — “நெல்சன் மண்டேலாவும் தந்தை செல்வாவும் சாக்கடை அரசியல் செய்யவில்லை. நான் நீதித்துறையை நேசிக்கின்றேன். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து இன்றும் எனக்கு தெரியவில்லை,” எனவும் தெரிவித்தார்.

அவரது இந்த உரை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814989

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time