உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஐஸ் போதை பொருட்களுடன்; ஏழு பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது – 5ம் திகதி வரை விளக்க மறியல்.!!!

(ஜே.கே)

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.நந்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சிமுனைனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்
சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1074450

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time