உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 13, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

ஜனாதிபதியின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு; சுல்பிகார் நீண்ட தூர சைக்கிள் ஓட்டம்.!!!

(பாறுக் ஷிஹான்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநிலையிலும் கூட அவரது ஆட்சி நீடிக்கவும் ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கடந்த 24 ஆந் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரம்பமான இச்சைக்கிள் ஓட்டப்போட்டியானது 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லையை அடைந்திருந்தது.

மேலும் எதிர்வரும் டிசம்பர் 3 ஆந் திகதி தனது ஓட்டத்தை நிறைவு செய்து ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி பின்னணி

இலங்கை திருநாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நீண்ட ஆயுள் மற்றும் நீண்ட கால ஆட்சி, சமாதான நல்லிணக்கம், போதை பாவனை முற்றாக ஒழிக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டம் இனமத பேதமற்ற நாட்டை உருவாக்கும் திட்டம் போன்றவைகளுக்கு ஆசி வேண்டி பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல சைக்கிள் ஓட்ட வீரர் சுல்பிகார் ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க அவர்கள் பிறந்த ஊரான அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தில் இருந்து இன்று காலை இச் சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்தார்.

நாட்டைச் சுற்றி கரையோர பிரதேசம் ஊடாக சென்று ஜனாதிபதி செயலகம் வரை செல்லவுள்ளும் இந்த சைக்கிள் ஓட்டத்தை தம்புத்தேகம விகாரையின் விகாராதிபதி பனாமுரே சாந்த ஹிமி கடந்த 24 ஆந் திகதி காலை 9:00 மணியளவில் ஆரம்பித்து வைத்தார்.

தப்புத்தேகமயில் ஆரம்பித்து மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஊடாக பொத்துவில் சென்று மொனராகலை, வெள்ளவாய, கதிர்காமம் மாத்தறை , காலி , பேருவளை ஊடாக கொழும்பு சென்று 10 வது தினத்தன்று ஜனாதிபதி செயலகம் வரை சைக்கிள் ஓட்டத்தில் செல்லவுள்ளார்.
சுல்பிகார் உங்களது பிரதேசங்களினூடாக வரும்போது அவரை அன்புடன் வரவேற்று தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்துள்ள பொத்துவில் சுல்பிஹாரை பல்வேறு பகுதி மக்கள் அன்புடன் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1226577

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time