உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’ கொழும்பு துறைமுகம் வருகை.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளின்படி மரியாதையுடன் வரவேற்றது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ‘INS SINDHUKESARI’ கப்பலின் குழுவினர், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், அவர்கள் இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருகை, இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933645

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time