இந்திய கடற்படை போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’ பயிற்சித் திட்டத்திற்காக கொழும்பு வந்தடைந்தது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ எனும் போர்க்கப்பல் Mixed Gas Diving Training பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்காக இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
Diving Support Vessel வகையைச் சேர்ந்த ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) பணியாற்றி வருகிறார்.
இந்த போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து Mixed Gas Diving Training பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
இந்த பயிற்சி திட்டம் இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கிடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முக்கிய வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர். அதேவேளை, இலங்கையின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


