உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 17, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகள் இடையே – முக்கிய பொருளாதார கலந்துரையாடல்.!!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதி (IMF) பிரதிநிதிகள் இடையிலான சிறப்பு கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டின் கீழ் ஆறாவது தவணை நிதி வழங்குதலுக்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலச் சந்திப்பாக அமைந்தது.

பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை மீட்கவும், அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கம் உறுதியுடன் செயல்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதற்கான மூலோபாயத் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை ஜனாதிபதி பெரிதும் பாராட்டியதுடன், பொருளாதார மறுமலர்ச்சி இலக்குகளை அடைவதற்காக IMF நிர்ணயித்த அளவுகளைத் தாண்டிச் செல்லும் முயற்சிகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான முக்கிய திசை எனவும், அதற்கான முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை IMF பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக அதன் தூதுக்குழுத் தலைவர் Evan Papageorgiou, மற்றும் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி Martha Woldemichael உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடல், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளில் முக்கிய கட்டமாக அமைகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 817875

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time