உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

2,400 கி.கி குஷ் போதைப் பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது; பெறுமதி சுமார் ரூ. 25 மில்லியன் என மதிப்பீடு.!!!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (17) கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ரூ. 25 மில்லியன் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயது மற்றும் 29 வயதுடைய இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தம்பதி முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

பயணப் பொதிக்குள் சூட்சுமான முறையில் மறைத்து வைத்து குஷ் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879673

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time