ஈரானுக்கான 10 பில்லியன் டொலர் எண்ணெய் வருவாயை விடுவிக்க UAE நடவடிக்கை? – ராய்ட்டர்ஸ் தகவல்; UAE மறுப்பு.!!!
ஈரானுக்கு முடக்கப்பட்டிருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எண்ணெய் வருவாயை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) விடுவிக்கவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தத் தொகையில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்கனவே அண்மையில் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மொத்தத் தொகை 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இருக்கக்கூடும் என்றும், போர் நிலவிய இறுதி வாரங்களில் ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்காமல் இருப்பதற்கான புரிந்துணர்வின் ஒரு பகுதியாக இந்த நிதி விடுவிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவலறிந்த இரு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறான தகவல்களை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மறுத்துள்ளதுடன், வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.