உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

பிராந்திய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகளுக்கு விரைவில் நடைமுறை தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இதன்போது, பிராந்திய ஊடகவியலாளர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் பல்வேறு சிக்கல்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, சில ஊடக நிறுவனங்கள் செய்திகளுக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்குவதில் தெளிவான நடைமுறைகளை பின்பற்றாதமை மற்றும் பல ஊடகவியலாளர்கள் தொழில் பாதுகாப்பின்றி பணியாற்றி வருவது குறித்து பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதற்காக தொடர்பாடல் செலவுகளையே தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும், அதனால் பாரிய பொருளாதார சுமைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஊடகங்கள் வழியாக மக்களிடம் போதுமான அளவில் சென்றடைவதில்லை என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, செய்திகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், பிராந்திய ஊடகவியலாளர்களின் தொடர்பாடல் செலவுகளை குறைக்கும் நோக்கில் சலுகை அடிப்படையிலான விசேட தொடர்பாடல் தொகுப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் தாம் இணக்கம் தெரிவிப்பதாக கூறினார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பிராந்திய ஊடகவியலாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று, அரச தகவல் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் அவற்றை பரவலாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர் அமைப்புகளின் தலைவர் சாலிய கமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன், தொழில் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக அரச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தலையீடு, நீண்டகாலமாக தீர்வுக்காக காத்திருந்த ஊடகத்துறையினரிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 876676

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time