உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

நிலச்சரிவு அபாய எச்சரிக்கை – பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.!!!

கடுமையான மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

இன்று (13) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் Level-1 (மஞ்சள்) நிலச்சரிவு அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பின்வரும் மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சுற்றிய பகுதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகள்
கேகாலை மாவட்டத்தின் வரகபொல, கேகாலை, ரம்புக்கன நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, குருவிட்ட, ஓபனாயக்க, பெல்மதுல்ல, இரத்தினபுரி, அம்பகமுவ பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன

தொடர்ச்சியான மழை காரணமாக மலைப்பகுதிகள், சரிவு நிலங்கள் மற்றும் மண் தளர்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பாறைகள் இடர்தல், மண் சிதறல், நிலம் பிளவுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து, உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 934208

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time