உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

சட்டம் அனைவருக்கும் சமம் – இந்த ஆண்டுக்குள் அதிகமானவர்கள் சிறையில் இருப்பார்கள்: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.!!!

இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் ஆட்சி அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இன்று (01) இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர் சூழ்நிலையால் எரிபொருள் மற்றும் உரத்தின் விலைகள் அதிகரித்திருந்த போதிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் நிவாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகள் தற்போது சிதறிய நிலையில் உள்ளதாகவும், அவர்கள் தனித்தனியாக மே தினக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர் எனவும் ஜனாதிபதி விமர்சித்தார்.

அத்துடன், அரசாங்கத்தின் மே தினக் கூட்டத்துக்கு சமமாகவாவது கூட்டத்தைக் காண்பிக்க முடியுமா என எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933759

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time