உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.!!!

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் 11 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933759

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time