உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மகிந்த ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா.!!!

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளதாகக் கூறினாலும், மகிந்த ராஜபக்சவுக்கு உரிய தண்டனை வழங்கப்படாத வரை அதனை தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

“இந்த அரசாங்கம் எவ்வளவு சாதனைகளைப் பற்றி பேசினாலும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படாத வரை, நாட்டை சரியான பாதையில் கொண்டு வந்துள்ளதாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தனது கடமையை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் நாளிலேயே அதனை பாராட்டத் தயாராக இருப்பதாகவும், அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் உண்மையைப் பேசுவதில் தாம் அஞ்சப்போவதில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை குறுகிய காலத்திற்குள் கைது செய்யும் திறன் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066839

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time