உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மலேசிய கடலோர காவல்படை கப்பல் ‘KM BENDAHARA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து – இலங்கை கடற்படையினர் உத்தியோகபூர்வ வரவேற்பு.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ நேற்று திங்கட்கிழமை ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலை வரவேற்றனர்.

இலங்கையை வந்தடைந்துள்ள / RELIANCE CLASS – MEDIUM ENDURANCE CUTTER’ வகைக்குரிய ‘KM BENDAHARA’ என்ற கப்பல் 64.16 மீட்டர் நீளம் கொண்டதுடன், 50 பேரினை கொண்ட அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளதுடன், மேலும் இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் (Maritime) MOHD FAHIMI BIN OMAR கடமையாற்றுகின்றார்.

‘KM BENDAHARA’ கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் குழுவினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளதுடன், இந்தக் கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு 2025 அக்டோபர் 30 ஆம் திகதி அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 815032

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time