உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற நிகழ்வில்; அதிகளவிளான மக்கள் பங்கேற்பு.!!!

(தில்சாத் பர்வீஸ்)

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “FREE PALESTINE” எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம் பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினரினால் கொடுக்கப்பட்ட மகஜரை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வாசித்துக்காட்டியதுடன், ஒன்று கூடிய பொதுமக்கள் அனைவரும் ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

இதேவேளை, குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ். எல். முஹம்மது ஹனீபாவிடம் கையளிக்க சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே. எம். கே. ஏ.ரம்சீன் காரியப்பர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர் அல்ஹாஜ் டாக்டர் ஏ. எம். எம். ரஷீத், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம். எல். எச். பசீர் மதனி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ. எம் நௌபர் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884748

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time