உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

அர்ச்சுனா எம்.பி.யின் உரைக்கு பாராளுமன்றத்தில் கட்டுப்பாடு.!!!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதன்படி நாளை (20) தொடக்கம் மே 08 ஆம் திகதி வரையான 08 நாட்களுக்கு பா.உறுப்பினர் அர்ச்சுனாவின் அறிக்கைகள் மீதான இடைநிறுத்தம் அமுலில் இருக்குமென்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரால் அவமதிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தும் அறிக்கைகளை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் அவ்வப்போது வெளியிடப்படும் தரக்குறைவான கருத்துக்கள், அநாகரீகமான மற்றும் கீழ்த்தரமான கருத்துக்களும் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்தும் நீக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அர்ச்சுனா எம்.பி.யின் நடத்தையைப் பொறுத்து இந்த தற்காலிக இடை நீக்கத்தை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230973

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time