ஹஜ் யாத்திரிகர் நலன்கள் கண்காணிக்க: இலங்கை தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்.!!!
-எம்.எஸ்.எம். ஸாகிர்-
2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கும், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரிகள் தொடர்பாக ஆராய்வதற்குமாக மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் இன்று (23) சவூதி அரேபியா பயணமானனர்.
இத்தூதுக்குழுவினர் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல்அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட இலங்கை ஹஜ் தூதுக்குழுவினரை, ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர் நீதியரசர் எம். ரீ. முஹம்மத் லபார் மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து, சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இத்தூதுக்குழு விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள இலங்கை யாத்திரிகர்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.