உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

67 கிலோவுக்கும் அதிகமான ஆம்பர்கிரிஸ் பறிமுதல்; இருவர் கைது.!!!

-கற்பிட்டி எம்.ஹெச்.எம். சியாஜ்-

மன்னார், சௌத்பார் கடற்கரைப் பகுதியில் 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஆம்பர்கிரிஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (11) வடமத்திய கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ நிறுவனத்தினரால் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்துவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான திமிங்கிலத்தின் ஆம்பர்கிரிஸ் தொகை கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாவர, விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ள ஆம்பர்கிரிஸ் தொகையும் சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215596

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time