உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

பல்துறை சாதனையாளர்கள்; ஒரே மேடையில் கௌரவிப்பு.!!!

(கே எ ஹமீட்)

மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா மூதூர் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரியும், மூதூர் சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும், மூதூர் பிரதேச முஸ்லிம் விவாக பதிவாளருமான எம்.வை.லாபீர் அவர்களின் தலைமையில் நேற்று (21) மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப், மூதூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.செல்வரத்திணம், கின்னியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிறாஜ், கின்னியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கணி மற்றும் உயர் அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது 9A சித்திகளை பெற்ற 200 மாணவர்கள், அல் குர்ஆனை மனனம் செய்த 100 ஹாபிழ் மாணவர்கள், 2025ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் 30 உயர் அதிகாரிகள், சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884740

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time