உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு; குடிநீர் மற்றும் சமைத்த உணவு வழங்கிய கடற்படை.!!!

(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவு வழங்குவதற்காக கடற்படையின் நடமாடும் சமையலறை மற்றும் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ளன.

அதேவேளை, மீதொடமுல்ல, ஆரச்சிகட்டுவ மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவை வழங்க ஒரு நடமாடும் சமையலறை நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் விநியோகம் தடைபட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய கடற்படையின் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814945

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time