உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு.!!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய உயிரிழப்புடன், சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கைதிகள் உள்ளிட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மோதலின் போது காயமடைந்த சுமார் 100 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதனால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215429

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time