உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

மும்பையில் கட்டடங்கள் இடிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.!!!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மும்பையின் மான்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று (05) ஏற்பட்ட இந்த விபத்தில், 2 முதல் 3 கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கட்டட இடிவுக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215429

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time