உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது; 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு.!!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோர் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215428

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time