உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 17, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாகன இலக்கத்தகடுகள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!

புதிய பாதுகாப்பு அம்சங்களும், நவீன தொழில்நுட்பங்களும் இணைந்த வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை அறிவித்தார்.

தற்போது நாட்டில் இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்கள் அதிகளவில் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், முந்தைய வர்த்தக நிறுவனங்களின் அரசியல் நடவடிக்கைகள், ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் கடந்த 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், புதிய சாரதி அனுமதிப் பத்திரமும் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 817902

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time