உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 16, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

தொடரும் பாக்கிஸ்தானின் – அனர்த்த நிவாரண உதவிகள்.!!!

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பாக்கிஸ்தானின் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அனுப்பிவைத்த முதல் நிலை நிவாரணப் பொருட்கள் நேற்று (04) மாலை இலங்கையை சென்றடைந்தன.

மொத்தம் 80 தொன் மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளதாக NDMA அறிவித்துள்ளது. முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் லாகூர் – கொழும்பு இடையே இயக்கப்படும் நான்கு தனித்தனி Srilankan Airlines விமானங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

நேற்றைய (04) விமானத்தில் 20 தொன் நிவாரண உதவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.அவற்றில் பாய்கள், பால் மாவு, அவசர பயன்பாட்டு நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பேரிடர் பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் பாக்கிஸ்தான் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. மற்ற விமானங்களும் அடுத்த நாட்களில் கொழும்பை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 814940

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time