உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சமீரா நாடு திரும்பினார்.!!!

இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பலஸ்தீன் ஆதரவு செயற்பாட்டாளர் சமீரா இன்று (24) ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, 𝐅𝐫𝐞𝐞𝐏𝐚𝐥𝐞𝐬𝐭𝐢𝐧𝐞 அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

காசா மக்களுக்கான மனிதநேய உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் சர்வதேச முயற்சியில் ஈடுபட்டிருந்த சமீரா, அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பலஸ்தீன் ஆதரவு குழுக்கள் அவரது விடுதலையை வலியுறுத்தி கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

நாடு திரும்பிய சமீராவை வரவேற்க விமான நிலையத்தில் பெருமளவான ஆதரவாளர்கள் திரண்டிருந்ததுடன், பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு கோஷங்களும் எழுப்பப்பட்டன.

சமீராவின் வருகை தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931799

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time