உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கடவுச்சீட்டிற்கு காத்திருக்கும் 26000 பேர்.!!!

புதிய கடவுச்சீட்டுக்கென 26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால் விண்ணப்பங்க்ள பெறப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சிலரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால், அவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் தமது அமைச்சிற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குமிடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுகின்ற போதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாமென பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230998

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time