உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

பெரிய நீலாவணையில் மர்மமாக  கொல்லப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம்;  பொலிஸாரினால் மீட்பு.!!!

(பாறுக் ஷிஹான்)

வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37வயது மதிக்கத்தக்க பெண் மீது இப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

மரணமடைந்த குடும்பப்பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214757

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time