உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கான புதிய நேர வரம்புகள் குறித்து: காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டல்.!!!

பொதுமக்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய அனுமதிக்கப்பட்ட நேர வரம்புகள் குறித்து காவல்துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இதற்கமைவாக, நிகழ்வுகளை நடத்தும் போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அமைப்பாளர்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

காவல்துறையினரின் அறிவிப்பின்படி, திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் நேரம் அதிகாலை 1.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, குறிப்பிட்ட நேர வரம்புகளுக்குள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துமாறு காவல்துறை அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075481

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time