உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

நரேந்திர மோடியின் வரலாற்றுச் சாதனைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து.!!!

இந்திய வரலாற்றில் மிக நீண்டகாலம் பிரதமராக பதவி வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கு இலங்கை உயர்ந்த மதிப்பளிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவையும் கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பங்களிப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066848

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time